Tuesday, October 16, 2012

ஒரு போகத்துக்கு ஏழு சாலு உழவு !
கோடை மழைக்கு ரெண்டுசாலு !

காணிக்கு இருபது வண்டி எருதள்ளி !
மடக்கு உழவு இரு சாலு ! 

"புல்லு மடக்க" இரு சாலு !
வெதப்புக்கு ஒரு சாலு ! ஆக,

காணிக்கு ஏழு சாலும் சேர்த்து ,
நடந்தது எழுபது மயிலு !

மறுநா மழைக்கு காத்திருக்கேன் !
வெதப்போட போயிடுமா ?

மானம்பாத்து காத்திருக்கேன் !
மழை வருமான்னு "மானத்தோட" !


ஒரு குத்து பயிறு வச்சி !
ஒரு வயித்து சோறு போட்டோம் !
அரை வயித்து பசியோட !
உளையில நடவு நட்டு !
உரலுல "வல்லம்" நெல்லு குத்தி ,
ஒரு படி அரிசியில உலைவச்சோம் !
அதுல உறுமத்துக்கும் கஞ்சி மிச்சம் !
நாக்குக்கு ருசியா சோறு !
நல்லநாளு பெருனாளுலத்தான் !
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,உழவன் !


உழைக்காதவன் எல்லாம், 
உழைக்கவேண்டும்!
விவாசாயிடம் பிச்சை கேட்கும் காலம் ,
வெகு தொலைவில் இல்லை !
எத்தொழில் போற்றிலும் !
இத்தொழில் போற்றனும் !


கண்டுபிடிப்பு:-
படித்தவனெல்லாம் புத்திசாலி என்றால் !
வாருங்கள் !
உணவு உற்பத்தி செய்ய !
எத்துனை தொழில் வந்தாலும் ,
மூன்று வேலை சோறு வேண்டும்.!
இல்லன்னா கண்டுபிடிப்புகளெல்லாம் ,
கண்டுபிடிக்கவேண்டும் !

இனி வரும் காலத்தில்,
குழந்தைகளுக்கு விவசாயம் தெரியவேண்டும் !


முதல் முயற்சியுடன் என் குழந்தைகளுடன் !
பெருமைக்காக என்றாலும் , உண்மையே !
என் பிள்ளைகளை பெற்றதில் !




விடியட்டும் !
ஒரு வேலை சோற்றுக்கே !
பிச்சைஎடுக்க வைக்கும் இந்த சமுதாயமும் ,
ஒரு மானமுள்ளதுதானா ? 
சாதி , மதம் , என்ற மதம்பிடித்து மதத்தினை திணிப்பவர்களே! 
முதலில் மனிதனாக மாற முயற்ச்சி செய்யுங்கள் ! பாவம் ! 
ஏழை எளிய மக்களின் இயலாமையை சாதகமாக்கி, 
அற்பத்தனமான ஆசைகளை காட்டி அவர்களின், 
உழைத்து வாழ்ந்த வாழ்க்கையையும் வீணாக்கி பிச்சை எடுக்க வைக்காதீர்கள் ..... வல்லரசாக வேண்டாம் !
முதலில் நல்ல அரசாக இருந்து ,
வருங்காலத்தின் முதுகெலும்பான இளைய சமுதாயத்தியாவது !
பிச்சை எடுக்கவைக்காமல் இருந்தால் போதும் !


நகர வாசிகளே !
நாளையும் எழுதுவீங்க !

கிராமத்தான பாத்து நாட்டான்னு ,
எங்க நிலைமையோ ,
விழி திறந்தாலே! கண்ணீர் வரும் ,
தண்ணீர் இல்லை என்பவர்கள் ,
"தன்"நீரை தருகின்றேன் ,
தாகம் தணியுங்கள்!
உழைத்தது எல்லாம் உங்களுக்கு ,
உழைப்பவனின் " உப்பும் "உங்களுக்கே !
உணர்வே இல்லியா ? 
எங்களுக்கு ,
"மினரல் வாட்டர்" வேண்டாம் ,
எங்கள் தலைமீது "இடி"ந்து விழும் ,
"மின்னலின் வாட்டர்" போதும் !
வாழ்ந்தாள் தண்ணீர் குடித்து வாழ்கிறேன் !
இல்லையேல், இடி விழுந்து சாகிறேன் !
சுயநலமான சமதாயத்தில் இன்னும் ,
எவளவு நாள்தான் வாழ்வதோ !


Monday, October 15, 2012

விளைவித்த விவசாயிக்கு ,
விலை வைக்கும் உரிமை கூட இல்லை ,
விளைந்த பயிரெல்லாம் ,
களத்துமேட்டிலே கால் விலைக்கு போயாச்சு !
மிச்சம் "அடுக்குப்பானையில்" 
அடுத்த வருஷ விதைப்புக்கு "விதை " மட்டும் ,
நாங்கள் விதையாக இருந்து முளைக்கின்றோம் !
அறுவடைக்கு மட்டும் யாரோ ! 

உழைச்ச எனக்கு ,
சோழ சோறும் , 
முருங்கை கீரை கூட்டும் , 
பொட்டுகடலை துவையலும் . 
ஆனால் அடுத்தவன், 
உழைப்பில் வாழும் சோம்பேறிக்கு,
பொன்னி அரிசி சாதமும், 
பொரியல் , கூட்டு , 
சாம்பார் ,ரசம் , தயிர், 
அப்பளம், வடை ,பாயாசம்.
என்ன கொடுமை சார்?


இன்று பயிருக்காக !
மண்ணில் புதைத்த என் கால்கள்,
"கால்களோடு" மட்டும் போகுமா ?
"நெல் " அறுவடைக்கு பின் ,
"இல்லை" நானுமா ?,,,,,,,,,, உழவன் !


உலகுக்கே! 
உணவளிக்கும் உழவனின் வயிற்றுக்கு,
ஒருபருக்கை சோறுகூட ,
ருசிக்காக கிடைக்கவில்லை !

பாவம் பசிக்காக!
" பழையதும் பச்சமிளகாயும்தான் மிச்சம்"
இதனால் பசியின் வயிற்றுப்புன்னும், 
சுருக்கங்கள் மட்டுமே சொச்சம்!

கொடுமைக்குகூட பாவம் ஏழை, 
விவசாயியைத்தான் பிடிகின்றதாம் ! 
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,என்ன கொடுமை ?