Friday, February 6, 2015

தோட்டத்து வேலியில் மறைவாக தானே உயிராகி காய்த்தும் பழுத்தும் போனது பாகற்காய் (பழம் ) ,,,
சற்றே வருத்தம் ...அட....டா...,
கொஞ்சம் முன்னாடியே தெரியாமல் போச்சே ,,,
இப்போது யாருக்கும் பயனில்லையே என்று யோசித்து பழத்தை பறித்து கரையில் போட்டுவிட்டேன்  ,,
அடுத்தநாள் அதே வழியே நடந்தேன் பார்த்தபோது பாகற்பழம் வெடித்து சிவப்பு நிறத்தில் முத்து முத்தாய் மின்னியது அதன் விதைகள் ,,,
அத்தனை விதைகளும் எத்தனை செடியாகும் ?
அத்தனை செடியும் எத்தனை காய் கொடுக்கும் ?
அத்தனை காய்களும் எத்தனை பேருக்கு
உணவாகும் ?
எதையோ உணர்த்துகிறது பாகற்காய் ,,,
வாழ்க்கையோடு !
இப்போது இவைகள் நடுவயலில்  வேலியின் பாதுகாப்புக்குள் பந்தல்கள் அமைத்து வளரப்போகிறது ,,,
புரிந்தது ,,
யாரும் கீழோரும் அல்ல ,,,
யாரும் மேலோரும் அல்ல ,,, என்று ,

வேலியில் இருந்த செடியின் வாரிசுகள் நிலத்தை ஆளப்போவது போல் நிலத்தை ஆண்ட பயிர் நாளை வேலிக்கும் போகலாம் ,,

அது பயிரை பொருத்து ,,,
அளவாக இருத்தல் எப்போதும் நிரந்தரம் !

Thursday, February 20, 2014


அன்றாட தேவையின் ஏக்கத்தோடு !
நித்தமும் என் வீட்டு அடுப்பங்கறை !
எங்களுக்கும் என்றுதான் ?விடியுமோ !

நிறையுமோ அடுப்பங்கறையாவது !
கண்ணீரும்கூட மறைந்துபோகுது ,
அணைந்த அடுப்பின் புகை மூட்டத்தில் ,

ஊதிய ஊதாங்குழலில் காற்றுகூட ,
கடக்க முடியா வேதனையோடு !
கடந்தே போகிறது என் காலமும் ,,,,,!

Tuesday, October 16, 2012

ஒரு போகத்துக்கு ஏழு சாலு உழவு !
கோடை மழைக்கு ரெண்டுசாலு !

காணிக்கு இருபது வண்டி எருதள்ளி !
மடக்கு உழவு இரு சாலு ! 

"புல்லு மடக்க" இரு சாலு !
வெதப்புக்கு ஒரு சாலு ! ஆக,

காணிக்கு ஏழு சாலும் சேர்த்து ,
நடந்தது எழுபது மயிலு !

மறுநா மழைக்கு காத்திருக்கேன் !
வெதப்போட போயிடுமா ?

மானம்பாத்து காத்திருக்கேன் !
மழை வருமான்னு "மானத்தோட" !


ஒரு குத்து பயிறு வச்சி !
ஒரு வயித்து சோறு போட்டோம் !
அரை வயித்து பசியோட !
உளையில நடவு நட்டு !
உரலுல "வல்லம்" நெல்லு குத்தி ,
ஒரு படி அரிசியில உலைவச்சோம் !
அதுல உறுமத்துக்கும் கஞ்சி மிச்சம் !
நாக்குக்கு ருசியா சோறு !
நல்லநாளு பெருனாளுலத்தான் !
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,உழவன் !


உழைக்காதவன் எல்லாம், 
உழைக்கவேண்டும்!
விவாசாயிடம் பிச்சை கேட்கும் காலம் ,
வெகு தொலைவில் இல்லை !
எத்தொழில் போற்றிலும் !
இத்தொழில் போற்றனும் !


கண்டுபிடிப்பு:-
படித்தவனெல்லாம் புத்திசாலி என்றால் !
வாருங்கள் !
உணவு உற்பத்தி செய்ய !
எத்துனை தொழில் வந்தாலும் ,
மூன்று வேலை சோறு வேண்டும்.!
இல்லன்னா கண்டுபிடிப்புகளெல்லாம் ,
கண்டுபிடிக்கவேண்டும் !

இனி வரும் காலத்தில்,
குழந்தைகளுக்கு விவசாயம் தெரியவேண்டும் !


முதல் முயற்சியுடன் என் குழந்தைகளுடன் !
பெருமைக்காக என்றாலும் , உண்மையே !
என் பிள்ளைகளை பெற்றதில் !




விடியட்டும் !
ஒரு வேலை சோற்றுக்கே !
பிச்சைஎடுக்க வைக்கும் இந்த சமுதாயமும் ,
ஒரு மானமுள்ளதுதானா ? 
சாதி , மதம் , என்ற மதம்பிடித்து மதத்தினை திணிப்பவர்களே! 
முதலில் மனிதனாக மாற முயற்ச்சி செய்யுங்கள் ! பாவம் ! 
ஏழை எளிய மக்களின் இயலாமையை சாதகமாக்கி, 
அற்பத்தனமான ஆசைகளை காட்டி அவர்களின், 
உழைத்து வாழ்ந்த வாழ்க்கையையும் வீணாக்கி பிச்சை எடுக்க வைக்காதீர்கள் ..... வல்லரசாக வேண்டாம் !
முதலில் நல்ல அரசாக இருந்து ,
வருங்காலத்தின் முதுகெலும்பான இளைய சமுதாயத்தியாவது !
பிச்சை எடுக்கவைக்காமல் இருந்தால் போதும் !