Thursday, February 20, 2014


அன்றாட தேவையின் ஏக்கத்தோடு !
நித்தமும் என் வீட்டு அடுப்பங்கறை !
எங்களுக்கும் என்றுதான் ?விடியுமோ !

நிறையுமோ அடுப்பங்கறையாவது !
கண்ணீரும்கூட மறைந்துபோகுது ,
அணைந்த அடுப்பின் புகை மூட்டத்தில் ,

ஊதிய ஊதாங்குழலில் காற்றுகூட ,
கடக்க முடியா வேதனையோடு !
கடந்தே போகிறது என் காலமும் ,,,,,!

Tuesday, October 16, 2012

ஒரு போகத்துக்கு ஏழு சாலு உழவு !
கோடை மழைக்கு ரெண்டுசாலு !

காணிக்கு இருபது வண்டி எருதள்ளி !
மடக்கு உழவு இரு சாலு ! 

"புல்லு மடக்க" இரு சாலு !
வெதப்புக்கு ஒரு சாலு ! ஆக,

காணிக்கு ஏழு சாலும் சேர்த்து ,
நடந்தது எழுபது மயிலு !

மறுநா மழைக்கு காத்திருக்கேன் !
வெதப்போட போயிடுமா ?

மானம்பாத்து காத்திருக்கேன் !
மழை வருமான்னு "மானத்தோட" !


ஒரு குத்து பயிறு வச்சி !
ஒரு வயித்து சோறு போட்டோம் !
அரை வயித்து பசியோட !
உளையில நடவு நட்டு !
உரலுல "வல்லம்" நெல்லு குத்தி ,
ஒரு படி அரிசியில உலைவச்சோம் !
அதுல உறுமத்துக்கும் கஞ்சி மிச்சம் !
நாக்குக்கு ருசியா சோறு !
நல்லநாளு பெருனாளுலத்தான் !
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,உழவன் !


உழைக்காதவன் எல்லாம், 
உழைக்கவேண்டும்!
விவாசாயிடம் பிச்சை கேட்கும் காலம் ,
வெகு தொலைவில் இல்லை !
எத்தொழில் போற்றிலும் !
இத்தொழில் போற்றனும் !


கண்டுபிடிப்பு:-
படித்தவனெல்லாம் புத்திசாலி என்றால் !
வாருங்கள் !
உணவு உற்பத்தி செய்ய !
எத்துனை தொழில் வந்தாலும் ,
மூன்று வேலை சோறு வேண்டும்.!
இல்லன்னா கண்டுபிடிப்புகளெல்லாம் ,
கண்டுபிடிக்கவேண்டும் !

இனி வரும் காலத்தில்,
குழந்தைகளுக்கு விவசாயம் தெரியவேண்டும் !


முதல் முயற்சியுடன் என் குழந்தைகளுடன் !
பெருமைக்காக என்றாலும் , உண்மையே !
என் பிள்ளைகளை பெற்றதில் !




விடியட்டும் !
ஒரு வேலை சோற்றுக்கே !
பிச்சைஎடுக்க வைக்கும் இந்த சமுதாயமும் ,
ஒரு மானமுள்ளதுதானா ? 
சாதி , மதம் , என்ற மதம்பிடித்து மதத்தினை திணிப்பவர்களே! 
முதலில் மனிதனாக மாற முயற்ச்சி செய்யுங்கள் ! பாவம் ! 
ஏழை எளிய மக்களின் இயலாமையை சாதகமாக்கி, 
அற்பத்தனமான ஆசைகளை காட்டி அவர்களின், 
உழைத்து வாழ்ந்த வாழ்க்கையையும் வீணாக்கி பிச்சை எடுக்க வைக்காதீர்கள் ..... வல்லரசாக வேண்டாம் !
முதலில் நல்ல அரசாக இருந்து ,
வருங்காலத்தின் முதுகெலும்பான இளைய சமுதாயத்தியாவது !
பிச்சை எடுக்கவைக்காமல் இருந்தால் போதும் !


நகர வாசிகளே !
நாளையும் எழுதுவீங்க !

கிராமத்தான பாத்து நாட்டான்னு ,
எங்க நிலைமையோ ,
விழி திறந்தாலே! கண்ணீர் வரும் ,
தண்ணீர் இல்லை என்பவர்கள் ,
"தன்"நீரை தருகின்றேன் ,
தாகம் தணியுங்கள்!
உழைத்தது எல்லாம் உங்களுக்கு ,
உழைப்பவனின் " உப்பும் "உங்களுக்கே !
உணர்வே இல்லியா ? 
எங்களுக்கு ,
"மினரல் வாட்டர்" வேண்டாம் ,
எங்கள் தலைமீது "இடி"ந்து விழும் ,
"மின்னலின் வாட்டர்" போதும் !
வாழ்ந்தாள் தண்ணீர் குடித்து வாழ்கிறேன் !
இல்லையேல், இடி விழுந்து சாகிறேன் !
சுயநலமான சமதாயத்தில் இன்னும் ,
எவளவு நாள்தான் வாழ்வதோ !